தமிழகம்

1.தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி ரூ.2,035 கோடி கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


இந்தியா

1.பீகாரைச் சேர்ந்த ராஜ் குமார் வைஷ்யா என்ற முதியவர் தனது 98 வயதில் நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலமாக பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் மிகவும் அதிக வயதில் முதுகலைப்பட்டத்திற்கு விண்ணப்பித்தவர் என்று லிம்கா சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
2.குஜராத் முதல்வராக விஜய் ருபானி,துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் 20 மந்திரிகள் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.இவர்களுக்கு ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


உலகம்

1.சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் 5 நட்சத்திர சொகுசு ஆடம்பர ஓட்டலை கட்ட தனியார் மற்றும் ரஷிய அரசும் இணைந்து திட்டமிட்டுள்ளது.பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் வீரர் ஹாரி கேன் ஒரே வருடத்தில் 39 கோல்கள் அடித்து ஆலன் சியேரெர் சாதனையை முறியடித்துள்ளார்.இதற்கு முன்பு 1995-ம் ஆண்டு ஆலன் சியேரெர் 36 கோல்கள் அடித்ததே சாதனையை இருந்தது. தற்போது 39 கோல்கள் மூலம் ஹாரி கேன் சாதனைப் படைத்துள்ளார்.
2.டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முயற்சியாக 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் தொடங்கியுள்ளது.இதில் தென்ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.அதிகாரபூர்வ 4 நாட்கள் டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட் பகல்-இரவாக நடத்தப்படுவது இது 8-வது முறையாகும். தென்ஆப்பிரிக்க மண்ணில் முதல் நிகழ்வாகும்.


இன்றைய தினம்

1.1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு