தமிழகம்

1.பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுப் பயணமாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புறப்பட்டுச் செல்கிறார்.

2.தமிழகத்தின் மின் நுகர்வோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி உள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3.நான்காம் கட்டமாக தமிழகத்தில் 58 கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்தியா

1.இணைய வழியில் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் தகவல் கோரும் வசதியை ஏற்படுத்துமாறு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பொது நல மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் 25 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வர்த்தகம்

1.மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)  ஒப்புதல் அளித்தது.

2.இந்தியன் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பொதுக் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்யும் வகையில் டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


உலகம்

1.இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்பட 8 நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சி, ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளிடையே பயங்கரவாத தடுப்புக்கான ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

2.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஹங்கேரிக்கு சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் ஸிஜ்ஜார்டோவுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இருதரப்பும் உறுதிபூண்டன.


விளையாட்டு

1.இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 318 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மே.இ.தீவுகள்.


ன்றைய தினம்

  • மால்டோவா விடுதலை தினம்(1991)
  • உலகின் முதல் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது (1939)
  • ரஷ்யாவின் திரைப்பட தினம்
  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)

– தென்னகம்.காம் செய்தி குழு