தமிழகம்

1.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளார். பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளார்.


இந்தியா

1.பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து 2017-2018-ஆம் நிதியாண்டில் அதிக கல்விக் கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய தென் மாநில மாணவர்களுக்கு கல்விக் கடன் அதிக அளவு பொதுத் துறை வங்கிகளால் அளிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.உத்தரகண்ட் மாநில புதிய ஆளுநராக ராணி பேபி மௌர்யா ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.


வர்த்தகம்

1.பிரபல ஆங்கில வணிக இதழான “ஃபார்ச்சூன்’ புரட்சிகரமான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. 2018-ஆம் ஆண்டுக்கான இந்த சர்வதேச பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.


உலகம்

1.ஜப்பானில் அடுத்த மாதம் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரதமர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக அந்த நாட்டின் தற்போதைய பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்துள்ளார்.
2.அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜான் மெக்கெய்ன் (81), சனிக்கிழமை காலமானார்.


விளையாட்டு

1.ஆசியப் போட்டியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிட்ஜ் விளையாட்டில் இந்தியா 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. ஆடவர் அணி மற்றும் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
குரூப் ஏ பிரிவு ஆடவர் ஹாக்கியில் நடப்பு சாம்பியன் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலிடம் பெற்றது.
ஆசியப் போட்டி குதிரையேற்றப் பந்தயத்தில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது


ன்றைய தினம்

  • மால்டோவா விடுதலை தினம்(1991)
  • கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)
  • உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)
  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)
  • தென்னகம்.காம் செய்தி குழு