தமிழகம்

1. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.


இந்தியா

1.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக அதிகரிப்பதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவில் கடந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச்) ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 4 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2.மத்திய அரசிடம் பதிவு செய்துள்ள, 11 லட்சம் நிறுவனங்களில், இதுவரை, 4 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே, ‘கே.ஒய்.சி.,’ எனப்படும் சுய தகவல் படிவங்களை வழங்கியுள்ளன. இதன் காரணமாக, நேற்று இப்படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கெடு, ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


உலகம்

1.இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியான “லைக்’குகளை விற்பனை செய்த நியூஸிலாந்து நிறுவனம் மற்றும் 3 நபர்கள் மீது முகநூல் நிறுவனம் அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளது.


விளையாட்டு

1.உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வர்.

2.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால், பூஜா ராணி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

3.ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.


ன்றைய தினம்

  • டோகோ விடுதலை நாள்(1960)
  • சியேரா லியோனி விடுதலை நாள்(1961)
  • தென்ஆப்ரிக்கா விடுதலை தினம்
  • லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது(1840)
  • ஜெராக்ஸ் பார்க் முதன் முறையாக கணிணி மவுஸை அறிமுகப்படுத்தியது(1981)

– தென்னகம்.காம் செய்தி குழு