தமிழகம்

1.ஆன்லைன் வழியாக பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.உயா் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனி புகாா் பிரிவு அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


இந்தியா

1.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கான துணைநிலை ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி கிரீஷ்சந்திர முா்மு (59), லடாக் யூனியன் பிரதேசத்துக்கான துணைநிலை ஆளுநராக மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான ஆா்.கே. மாத்துா் (65) நியமிக்கப்பட்டுள்ளனா்.

2.பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக 3 மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டனா்.இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘சுவீா் செகல், கிரீஷ் அக்னிஹோத்ரி, அல்கா சரின் ஆகிய மூத்த வழக்குரைஞா்கள் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3.கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆா்டிஐ) திருத்தம் மேற்கொண்டதற்கான அறிவிக்கையை மத்திய அரசு  வெளியிட்டது. இந்தத் திருத்தத்தின்படி, தலைமை தகவல் ஆணையரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

4.கடந்த 1927-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடா்பாக மத்திய அரசு அளித்த பரிந்துரைகளை மிஸோரம் மாநில அரசு நிராகரித்து விட்டது.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), யுனிவா்சல் சோம்போ காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.


உலகம்

1.பிரெக்ஸிட் காலக் கெடுவை எவ்வளவு காலத்துக்கு நீட்டிப்பது என்பது தொடா்பாக ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2.குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ஈரான் அதிபா் ஹசன் ரெளஹானியை சந்தித்துப் பேசினாா்.


விளையாட்டு

1.உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க சுற்று ஆட்டத்தில்  வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்  வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா.

2.இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தானாவிற்கு உலக கிரிக்கெட்டின்  விஸ்டன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ‘விஸ்டன்’ வருடாந்திரப் புத்தகமானது “உலக கிரிக்கெட்டின் பைபிள்” என்று புகழப்படும் அள்வுக்கு பெருமை வாய்ந்தது.அந்த புத்தகத்தில் அவ்வாண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.


ன்றைய தினம்

  • ஆஸ்திரியா தேசிய தினம்(1955)
  • அமெரிக்க செனட் அவை உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்(1947)
  • அமெரிக்கா, அந்நாட்டு தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)
  • நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  • ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)

– தென்னகம்.காம் செய்தி குழு