தமிழகம்

1.18 சட்டப் பேரவை உறுப்பினர்களை நீக்கி பேரவைத் தலைவர் பி.தனபால் வெளியிட்ட உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன்  தீர்ப்பளித்தார்.


இந்தியா

1.தில்லி அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நோயாளிகள் நல குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள 27 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை ஆதாயம் தரும் இரட்டைப் பதவி குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யக் கோரும் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

2.தன்னை கட்டாய விடுப்பில் செல்லுமாறு, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனுவை மீது உச்ச நீதிமன்றம்  விசாரிக்கவுள்ளது.

3.நாடு முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்திய மொபைல் காங்கிரஸின் 2-ஆவது பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


வர்த்தகம்

1.கடந்த நிதியாண்டில் செப்டம்பர் இறுதி வரையிலான அரையாண்டில் நிதிப் பற்றாக்குறையானது பட்ஜெட் மதிப்பீட்டில் 91.3 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் இதே கால அளவில் அது 95.3 சதவீதத்தை எட்டியுள்ளது.


உலகம்

1.எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (எஃப்ஈஆர்சி) தலைவராக அமெரிக்கவாழ் இந்தியரான வழக்குரைஞர் நீல் சாட்டர்ஜியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்தார்.

2.எத்தியோப்பியாவின் முதல் பெண் அதிபராக முன்னாள் தூதரக அதிகாரி சாலேவொர்க் ஸீவ்டே (60) தேர்வு செய்யப்பட்டுள்ளார்


விளையாட்டு

1.இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சர்வதேச தரவரிசையில் ஓரிடம் முன்னேறி மீண்டும் 2-ஆம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் சீன தைபேவின் டாய் ஸு யிங் நீடிக்கிறார்.

2.பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நெவால் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

3.விராட் கோலி  205 இன்னிங்ஸ்களில் 10,000 ரன்களை கடந்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நான்காவது முறையாக ஒரு நாள் ஆட்டத்தில் 150-க்கு மேல் ரன்களை விளாசியுள்ளார் கோலி. 10,000 ரன்களை கடந்த 5-ஆவது இந்திய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 13-ஆவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.


ன்றைய தினம்

  • ஆஸ்திரியா தேசிய தினம்(1955)
  • அமெரிக்க செனட் அவை உறுப்பினர் ஹிலாரி கிளிண்டன் பிறந்த தினம்(1947)
  • அமெரிக்கா, அந்நாட்டு தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)
  • நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  • ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)
  • தென்னகம்.காம் செய்தி குழு