தமிழகம்

1.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் சார்பில், புதிதாக 5,257 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் (பங்க்குகள்) திறக்கப்பட உள்ளன. இதற்காக, விநியோகஸ்தர்கள்( டீலர்கள்) நியமிக்கப்பட உள்ளனர்.

2.திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27-இல் நடத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கல் தெரிவித்தார்.


இந்தியா

1.தேர்தல் பிரசாரத்துக்கு நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே வேட்பாளர்கள் ரொக்கமாக செலவழிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

2. நாடு முழுவதும் புதிதாக 65,000 பெட்ரோல் விற்பனை நிலையங்களை அமைக்க பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3.கடற்படை தலைமைத் தளபதி சுனில் லன்பா 4 நாள் பயணமாக ரஷ்யாவுக்கு இன்று
செல்கிறார்.

4.உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமருக்கு 221 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலச் சிலை நிறுவப்படும் என்று அம்மாநில அரசு  அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.இருசக்கர மற்றும் பயணிகள் வாகன விற்பனையில் கடும் மந்த நிலை நிலவியது. பண்டிகை கால கட்டமாக கருதப்படும் அக்டோபர் 10 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான 42 நாள்களில் மொத்த புதிய வாகனங்களின் பதிவானது 20,49,391-ஆக இருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் 21-நவம்பர் 1 ஆகிய தேதிகளுக்கிடையில் இந்த பதிவானது 23,01,986-ஆக அதிகரித்து காணப்பட்டது.


உலகம்

1.பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள்  ஒப்புதல் அளித்தனர்.

2.மகாத்மா காந்தி, பிரிட்டன் அரசருக்கு தனது கைப்பட எழுதிய பிறந்த நாள் வாழ்த்து நன்றி கடிதம் ஆன்லைனில் ஏலத்துக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியுடன் இந்த ஏலம் முடிவடையவுள்ளது.


விளையாட்டு

1.தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான பிஸ்டல் பிரிவில் மானு பாக்கர் இரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.

2.சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சமீர் வர்மா  தனது பட்டத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.


ன்றைய தினம்

  • உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்
  • மும்பை பயங்கரவாத தாக்குதல் தினம் (2008)
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1949)
  • நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1842)
  • நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா, அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்(2001)
  • சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் தனது முதலாவது செய்மதியான ஆஸ்டெரிக்ஸ்-1 ஐ விண்ணுக்கு அனுப்பியது(1965)
  • தென்னகம்.காம் செய்தி குழு