Current Affairs – 26 November 2017
தமிழகம்
1.பிளஸ் 1 எழுதும் தனித் தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது என்றும், அதற்குப் பதிலாக அவர்கள் 90 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வை எழுதினால் போதும் என்றும், பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்தியா
1.தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
2.மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் ஃபியூலியா பகுதியை சேர்ந்த இரண்டு சுயஉதவிக் குழுக்கள் இணைந்து 9 கிலோ எடை உள்ள மிகப்பெரிய ரசகுல்லாவை தயாரித்துள்ளன. இதுவே உலகின் மிகப்பெரிய ரசகுல்லா.
3.புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் உள்ளிட்டவற்றின் சிகிச்சைக்கு வழங்கப்படும் 51 மருந்துகளின் அதிகபட்ச விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான என்பிபிஏ நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
உலகம்
1.உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசாஸ்(Jeff Besos), முதலிடம் பிடித்தார்.
வர்த்தகம்
1.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 17 சதவீதம் அதிகரித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. தங்கப் பத்திரம் வெளியீடு வரும் நவ. 27ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலையை மத்திய அரசு ரூ.2,961ஆக நிர்ணயித்துள்ளது.
3.சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு புவர், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டில் மாற்றம் எதையும் செய்யாமல், பழைய நிலையே தொடரும் என்று அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இன்றைய தினம்
1.1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு