தமிழகம்

1.தமிழக சட்டப் பேரவையில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே முழுமையான ஊதியத்தைப் பெற்றுள்ளனர்.

2.தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் சராசரியை விட தென்மேற்குப் பருவமழை குறைவாக இருக்கும் என கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.


இந்தியா

1.புதிய இந்தியாவை உருவாக்கப் புதிய உத்வேகத்துடன் புதிய பயணத்தை தொடங்குவோம் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் நரேந்திர மோடி தெரிவித்தார்.

2.16ஆவது மக்களவையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைத்தார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 205 கோடி டாலர் (ரூ.14,350 கோடி) குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசை விட, மாநிலங்களின் கடன் வளர்ச்சி அதிகமாக உள்ளது, ‘கேர் ரேட்டிங்ஸ்’ ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.


உலகம்

1.தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படை தளபதியாக, இந்திய ராணுவ அதிகாரி சைலேஷ் தினேகரை ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.


விளையாட்டு

1.ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஜூன் 9ஆம் தேதி பிரெஞ்ச் ஓபன் நிறைவு பெறுகிறது.


ன்றைய தினம்

  • ஜார்ஜியா தேசிய தினம்
  • போலந்து அன்னையர் தினம்
  • ஜார்ஜியா மக்களாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1918)
  • பிரிட்டன் கலானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966)
  • ஐரோப்பிய கொடி, ஐரோப்பிய சமூகத்தால் பெறப்பட்டது(1986)

– தென்னகம்.காம் செய்தி குழு