தமிழகம்

1.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச சட்ட உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டது.
2.திருவாரூரில் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளதையொட்டி, நகர்ப் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
3.முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு(57) சென்னையில் நேற்று காலமானார்.
4.இந்தியாவிலேயே மிக நீண்ட தூர சுரங்க வழிப்பாதை கொண்டது சென்னை மெட்ரோ ரயில்தான் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.பச்சை வழித்தடத்தில் எழும்பூர் மெட்ரோ மற்றும் சென்னை சென்டிரல் மெட்ரோ, நீல வழித்தடத்தில் சைதாப்பேட்டை மெட்ரோ, நந்தனம், தேனாம்பேட்டை மற்றும் ஏஜி – டிஎம்எஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.


இந்தியா

1.கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு வெற்றி பெற்றது. மக்கள் தங்களுக்கு தனிப்பெரும்பான்மையை அளிக்காவிட்டாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களது நலனுக்காக உழைப்போம் என்று அப்போது குமாரசாமி தெரிவித்துள்ளார்.
2.கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர்.ரமேஷ் குமார் ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
3.மிஸோரம் மாநில ஆளுநராக, கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4.சர்வதேச அளவில் இணையதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான சேவைகளை அளித்து வரும் ஆர்எஸ்ஏ நிறுவனம், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் எந்த நாட்டில் இணையதளம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன என்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது.இதில் இணைய தளம் மூலம் அதிக அளவில் தகவல் திருடப்படும் நாடுகள் பட்டியலில் கனடா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் 4-ஆவது இடத்தில் பிரேசில் உள்ளது. நெதர்லாந்து, கொலம்பியா, ஸ்பெயின், மெக்ஸிகோ, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
5.அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டிய இந்திய-வங்கதேச எல்லை டிசம்பர் மாதத்தில் முழுமையாக மூடப்படும் என்று அந்த மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 76.76 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
2.இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2017-2018-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.41.56 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2016-17 நிதியாண்டின் இதே கால அளவில் ரூ.28.81 கோடியாக இருந்தது.


உலகம்

1.அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் 3 இந்தியர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி மாணவர் குழுவினர், உலகின் மிகச்சிறிய கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்துள்ளனர்.அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களான விக்ரம் ஐயர், யோகேஷ் சுகவாத், ஜோஹன்னஸ் ஜேம்ஸ், பேராசிரியர்கள் ஷியாம் கொல்லகோட்டா, சேவியர் ஃபுல்லர் ஆகியோர் இணைந்து இந்த கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்துள்ளது.தும்பி பூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த கண்காணிப்பு விமானத்துக்கு ‘ரோபாஃபிளை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலோ அல்லது தங்கும் அறைகளிலோ தகவல் தொடர்புக்கு உதவும் ஸ்மார்ட் கடிகாரங்களை வீரர்கள், நிர்வாகிகள் அணியக்கூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.
2.உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் லியான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


ன்றைய தினம்

  • 1918-ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு