தமிழகம்

1.நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்தியா

1.மக்களைவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவிகளை அதிகளவில் இணைக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையில்  இணைக்கப்பட்டன.


வர்த்தகம்

1.ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும் அதன் தலைவருமான நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இயக்குநர் குழுவிலிருந்து  விலகினர்.


உலகம்

1.நிலவை சோதனை செய்யும் நோக்கில், இந்தியா அனுப்பவுள்ள சந்திரயான்-2 செயற்கைக்கோளில் அமெரிக்காவின் லேசர் கருவி பொருத்தப்படவுள்ளதாக நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிலவின் பரப்பில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில், சந்திரயான்-2 செயற்கைக்கோளை அடுத்த மாதம் விண்ணில் ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.


விளையாட்டு

1.பிரசித்தி பெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா-ரஷ்யாவின் டெனிஸ் ஷபலபோவ் தகுதி பெற்றனர்.

2.யூரோ 2020 கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி, ஹங்கேரி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.


ன்றைய தினம்

  • வங்கதேச விடுதலை மற்றும் தேசிய தினம்(1971)
  • ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்(1953)
  • மியான்மரின் புதிய தலைநகராக நாய்பிடோ நகரம் ராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது(2006)
  • யு.கே.,ல் வாகன ஓட்டுனர்களுக்கான தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது(1934)

– தென்னகம்.காம் செய்தி குழு