Current Affairs – 26 June 2019
தமிழகம்
1.உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டிஎம்சி நீரை காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
2.போக்குவரத்து காவலர்களைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் இ-செலான் கருவி வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
3.தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா
1.திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களும், நடிகைகளுமான நஸ்ரத் ஜஹான், மிமி சக்ரவர்த்தி ஆகிய இருவரும் மக்களவையில் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
வர்த்தகம்
1.கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 21-ஆம் தேதி வரையிலான கால அளவில், இந்தியாவின் காபி ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே கால அளவோடு ஒப்பிடுகையில் சரிவைக் கண்டுள்ளதாக இந்திய காபி வாரியம் தெரிவித்துள்ளது.
2.இந்திய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 118.38 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
உலகம்
1.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
2.ஜி-20 அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஒஸாகா நகரில் ஜி-20 அமைப்பு நாடுகளின் 14-ஆவது உச்சி மாநாடு வரும் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
3.பிரெக்ஸிட் விவகாரத்தில் ராஜிநாமா செய்துள்ள தெரசா மே-வுக்கு பதிலாக, பிரிட்டனின் பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பதை வரும் ஜூலை மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்போவதாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை பெற்றது ஆஸ்திரேலியா.
இன்றைய தினம்
- சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
- ருமேனியா கொடி நாள்
- மடகாஸ்கர் விடுதலை தினம்
- அஜர்பைஜன் ராணுவ மற்றும் கடற்படை தினம்
- உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)
– தென்னகம்.காம் செய்தி குழு