Current Affairs – 26 June 2018
தமிழகம்
1.கலை பண்பாட்டுத் துறை சார்பில், சென்னையில் ஆண்டுதோறும் இசை விழா நடத்தப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித்தார்.
2.காவிரி மேலாண்மை வாரியத்துக்கான உறுப்பினரை கர்நாடக அரசு அறிவித்தது.
இந்தியா
1.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1. தமிழகத்தில், 2019 ஜனவரியில் நடைபெற உள்ள, ‘ஜிம் – 2019 என்ற, இரண்டாவது உலக
முதலீட்டாளர்கள் மாநாட்டை, 73 கோடி ரூபாய் செலவில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என, தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2.வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை
பட்டியலிட, மும்பை பங்குச் சந்தையில், ஜூலை, 9ல் தனி பிரிவு துவக்கப்பட உள்ளது.
உலகம்
1.துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரிஸெப் தயீப் எர்டோகன் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.
2.அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக சிறிய அளவிலான கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. 0.3 மி.மீட்டர் நீளமுள்ள இந்த கம்ப்யூட்டரை அவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
விளையாட்டு
1. ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வளரிவன் தங்கப்பதக்கம் வென்றார்.
2. ரஷ்யாவை 3-0 என வென்று குரூப் ஏ பிரிவில் உருகுவே அணி 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.
இன்றைய தினம்
- சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
- ருமேனியா கொடி நாள்
- மடகாஸ்கர் விடுதலை தினம்
- அஜர்பைஜன் ராணுவ மற்றும் கடற்படை தினம்
- உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)
–தென்னகம்.காம் செய்தி குழு