Current Affairs – 26 July 2019
தமிழகம்
1.தமிழக காவல்துறையில் 111 காவல் ஆய்வாளர்களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
2.சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை (போக்ஸோ) விசாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3.நாடாளுமன்ற கூட்டத்தொடரை வரும் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
4.நாட்டு மக்களுக்கு சிரமம் அளிக்கும் வகையில் இருக்கும் 58 பழைய சட்டங்களை நீக்குவதற்கான மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
5.மின்னணு முறையிலான கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போர்ட்) அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
வர்த்தகம்
1.தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கியின் லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.
2.பொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கி முதல் காலாண்டில் ரூ.980 கோடி இழப்பைக் கண்டுள்ளது.
உலகம்
1.பிரிட்டனில் போரிஸ் ஜான்ஸன் தலைமையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவையில் 3 இந்திய வம்சாவளியினருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
2.முகநூலில் ஊடுருவி, அதன் 8.7 கோடி பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடியது தொடர்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா மீது அமெரிக்க வர்த்தக ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
விளையாட்டு
1.ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாய் பிரணீத் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
2.ஏடிபி டென்னிஸ் போட்டியான அட்லாண்டா ஓபனில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண்/இஸ்ரேலின் ஜோனதன் எர்லிச் ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
3.சர்வதேச கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 2 இடங்கள் சறுக்கி 103-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
இன்றைய தினம்
- கார்கில் நினைவு தினம்
- மாலத்தீவு விடுதலை தினம்(1965)
- உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)
- உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)
- நியூயார்க், அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)
- டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது(2005)
– தென்னகம்.காம் செய்தி குழு