Current Affairs – 26 July 2018
தமிழகம்
1.எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவமனை மற்றும் அரசினர் தாய்சேய் நல மருத்துவமனை 175-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1844-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. மெட்ராஸ் லையிங் இன் ஹாஸ்பிட்டல்’ என்ற பெயரில் பிரிட்டிஷ் பெண்களுக்கு மட்டுமே இந்த மருத்துவமனையில் முதலில் பிரசவரம் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1882-ஆம் ஆண்டிலிருந்து தான் இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
2.உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, கன்னியாகுமரியில் வருகிற செப்டம்பர் 21 முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தியா
1.வங்கிகளில் கடன் வாங்கி விட்டு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, மோசடியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தலைமறைவு நிதி மோசடியாளர் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
2.வெளிநாடுகளில் சட்ட விரோதமாக வசிக்கும் 8,363 இந்தியர்கள், அந்த நாடுகளில் அடைக்கலம் கேட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.
வர்த்தகம்
1. மகளிர் திட்ட குழுவினர் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய, அமேசான் நிறுவனம், மாவட்ட வாரியாக, தேர்வு செய்து வருகிறது.
உலகம்
1.ராணுவத்துக்கு இந்தியாவைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக சீனா செலவிடுகிறது.
ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ஸ் நிறுவனத்தின் ஆய்வுத் தகவலின்படி, கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா தனது ராணுவத்துக்கு சுமார் ரூ.15.68 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. அதேகாலத்தில் இந்தியா சுமார் ரூ.4.39 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.
விளையாட்டு
1.தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) கிரிக்கெட் குழு உறுப்பினர்களாக இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2.அட்லான்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், லியாண்டர் பயஸ் ஆகியோர் தங்களது பிரிவில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினர்.
இன்றைய தினம்
- கார்கில் நினைவு தினம்
- மாலத்தீவு விடுதலை தினம்(1965)
- உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)
- உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)
- நியூயார்க், அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)
- டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது(2005)
–தென்னகம்.காம் செய்தி குழு