தமிழகம்

1.தற்காலிக ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தை ரூ.7,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

2.ஜனவரி 31 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (83) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கலால் தின விழாவில் 15 ஆண்டுகளுக்குக்கும் மேலாக மத்திய மறைமுக வரிகள் வாரியத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 44 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டுச் சான்றிதழ் – விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தில் பணியாற்றும் மூன்று உயரதிகாரிகளும் அடங்குவர்.

3.தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இசைப்பதற்காக “சங்நாதம்’ என்ற பெயரில் புதிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரிட்டீஷார் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கீதமே இதுவரை அணிவகுப்பின்போது இசைக்கப்பட்டு வந்தது.மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியைச் சேர்ந்த இசைக் கலைஞர் தனுஜா நாஃப்டே இந்த கீதத்தை உருவாக்கினார்.

4.காவல் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் 855 பேருக்கு, குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.


வர்த்தகம்

1.ஹிந்துஸ்தான் யுனிலீவர் உடன் (ஹெச்யுஎல்) இணையும் திட்டத்துக்கான இந்திய வர்த்தக போட்டி ஆணையத்தின் (சிசிஐ) அனுமதியை கிளாக்ஸா ஸ்மித்கிளைன் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் இந்தியா (ஜிஎஸ்கேசிஹெச் இந்தியா) பெற்றுள்ளது.

2.அஞ்சலக வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டியுள்ளது என தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

3.சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் ரூ. 23 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் சுரங்கம், புதிய மின் திட்டங்களை அமைக்க என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.


உலகம்

1.அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டன.

2.அமெரிக்க நாடாளுமன்றத்தின் முக்கிய குழுவான பொருளாதார மற்றும் நுகர்வோர் கொள்கைக்கான துணைக் குழுவின் தலைவராக இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

3.இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த, “3 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவும் கூட்டாகத் தெரிவித்தனர்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜாம்பவான்கள் ஜோகோவிச்-ரபேல் நடால் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளனர்.


ன்றைய தினம்

  • உலக சுங்கத்துறை தினம்
  • இந்திய குடியரசு தினம்(1950)
  • உகாண்டா விடுதலை தினம்
  • இந்தி, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது(1965)
  • இஸ்ரேலும், எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன(1980)

– தென்னகம்.காம் செய்தி குழு