இந்தியா

1.நாட்டின் 69-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
2.முதன் முறையாக மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியின் உறவுக்கார தீவிரவாதி உள்பட 3 தீவிரவாதிகளை கொன்று தானும் உயிர் நீத்த விமானப்படை வீரர் ஜே.பி நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.இதற்கு முன்பு ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமே அசோக் சக்ரா விருதை பெற்று வந்தனர்.
3.கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனிக்கு, இந்த ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
4.2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதும் நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை பயன்படுத்தி புத்தாக்க முறையில் சாலை அமைத்து அதற்கு காப்புரிமை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் வாசுதேவனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின பெண் லட்சுமி குட்டிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 500 மூலிகை மருந்துகள் நினைவில் வைத்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு பாம்புக்கடி, பூச்சி கடிகளில் இருந்து சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார்.மேலும், ஐ.ஐ.டி. கான்பூர் பேராசிரியர் அரவிந்த் குப்தாவு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓவியர் ஷியாம், மேற்கு வங்காளத்தின் 99வயது சுதந்திரப் போராட்ட வீரர் சுதான்சு பிஸ்வாஸ், கேரளா மருத்துவர் எம்.ஆர். ராஜகோபால், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் முரளிகாந்த் பேட்கர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷினி மிஸ்திரி வீட்டு வேலைகள் செய்து ஏழைகளுக்காக மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளார். இவரின் சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுலாகட்டி நரசம்மா, திபெத்திய மூலிகை மருத்துவர் யேஷி டோடெனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச சுங்க தினம் (International Customs Day).
சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு அதன் முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ஆம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது. 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன் பின்னர் 161 சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். இந்த அமைப்பு உலகின் 98 சதவீத பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. சர்வதேச சுங்க தினம் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு