தமிழகம்

1.குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இனி நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும் என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2.சேலம் தலைவாசல் கூட்டு ரோடு அருகில் 900 ஏக்கரில் அமையும் ஒருங்கிணைந்த நவீன கால்நடை பூங்காவில் நாட்டின, கலப்பின காளைகளைக் கொண்டு ரூ. 100 கோடியில் உறை விந்து உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.


இந்தியா

1.தில்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

2.மிஸோரம் மாநிலத் தலைநகர் ஐசாலில் இயங்கி வரும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகத்தை வரும் மே 15-ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


வர்த்தகம்

1.மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், தேசிய ரப்பர் கொள்கையின் வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது.

2.தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அதன் அனுமதியின்றி, எந்தவொரு வங்கியோ, நிதி நிறுவனமோ, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும நிறுவனங்களின் கடன்களை, வாராக்கடன் பிரிவில் சேர்க்கக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது.

3.அதானி குழுமம், ஐந்து விமான நிலையங்களை நிர்வகிக்கும் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது.


உலகம்

1.சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிவிதிப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

2.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா டால்பின் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ படத்திற்காக அதன் இயக்குனர் அல்போன்சோ கியுரான் பெற்றுக் கொண்டார். சிறந்த இயக்குனருக்கான விருதை ரோமா படத்தின் இயக்குநர் அல்போன்சோ குவாரன் வென்றுள்ளார்.தி ஃபேவரைட் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஒலிவியா கோல்மேன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். போகிமியான் ரஃப்சோடி’ என்ற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரமி மாலெக் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.


விளையாட்டு

1.சென்னையின் ராகுல் ரங்கசாமிக்கு இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் வளர்ந்து வரும் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

2.சிகாகோவில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் செளரவ் கோஷல். அதே நேரம் ஜோஸ்னா சின்னப்பா தோல்வியுற்றார்.

3.ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.


ன்றைய தினம்

  • குவைத் விடுதலை தினம்(1991)
  • 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)
  • டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் என்ற உலகின் முதல் இணை உலாவியை அறிமுகப்படுத்தினார்(1991)
  • பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)

– தென்னகம்.காம் செய்தி குழு