தமிழகம்

1.முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 34.53 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக உலக வங்கியின் ஒத்துழைப்புடன் தொகுக்கப்பட்ட ஆய்வு நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று இணையதளம் வாயிலாக பிறப்புச் சான்றிதழில் பெயர்களைச் சேர்க்கும் புதிய முறையும் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.


இந்தியா

1.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

2.விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா அமைப்பு, சுலப் இன்டர்நேஷனல், எகல் அபியான் அறக்கட்டளை, யோஹெய் சஸாகாவா அமைப்பு ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி அமைதி விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

3.முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 அதிவிரைவு ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

4.குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாகாலாந்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வர்த்தகம்

1.கோட்டக் மஹிந்திரா வங்கியில் வெளிநாட்டு பங்கு மூலதனத்தின் அளவை உயர்த்திக் கொள்ள அவ்வங்கியின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2.புதிய வரிசையில் 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரவுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

3.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, அமேஸான் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இணைந்துள்ளார்.


உலகம்

1.ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.

2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இரண்டாவது முறையாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தனர்.


விளையாட்டு

1.ஈரான் நாட்டின் சபாஹர் நகரில் நடைபெற்று வரும் மாக்ரன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி இறுதிச் சுற்றுக்கு 6 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மணிஷ் கெளஷிக் 60 கிலோ, சதீஷ்குமார் 91 கிலோ, தீபக் சிங் 49 கிலோ, லலிதா பிரசாத் 52 கிலோ, சஞ்சித் 91 கிலோ, மஞ்சித் சிங் பங்கால் 75 கிலோ ஆகியோர் அரையிறுதிச் சுற்றில் தத்தமது ஆட்டங்களில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


ன்றைய தினம்

  • டொமினிக்கன் குடியரசின் தேசிய தினம்
  • நியூ பிரிட்டானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1700)
  • பிரிட்டன் தொழிற்கட்சி அமைக்கப்பட்டது(1900)
  • ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது(1940)
  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது(1951)

– தென்னகம்.காம் செய்தி குழு