இந்தியா

1.இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நடந்து முடிந்தது.
2.ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
3.மைசூரு மன்னர் வம்சத்தின் வாரிசான 28-வது இளவரசருக்கு நேற்று பெங்களூரு அரண்மனையில் நடைபெற்ற விழாவில் அதியவீர் நரசிம்ம உடையார் என்ற பெயர் சூட்டப்பட்டது.


விளையாட்டு

1.சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீரரை வென்று இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2.தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக நிறைவடைந்தன. இதில் நார்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தை கனடா பிடித்தது.


இன்றைய தினம்

1.1909 – முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்படம் இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குத் திரையிடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு