தமிழகம்

1.இந்திய அளவில் தமிழக சுகாதாரத் துறை 2-வது இடத்தைப் பிடித்துள்ளது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் வினோத் கே.பவுல் தெரிவித்தார்.

2.உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை வரும் 2019 மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் ஃபெரோஸ் கான் தெரிவித்தார்.


இந்தியா

1.நாட்டிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் ரயில்-சாலை இரண்டு அடுக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் பொகீபில் என்னும் இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 4.94 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் அடுக்கில் இரட்டை அகல ரயில் பாதையும், மேல் அடுக்கில் மூன்று வழிச் சாலையும் இடம்பெற்றுள்ளன.

2.அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவுக்கு ஷகீத் தீப் தீவு என்றும், ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீவ் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வர்த்தகம்

1.லக்னெளவிலிருந்து இராக்குக்கு நேரடி விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

2.புதிய ரூ.20 நோட்டை விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, அவரது இலங்கை சுதந்திர கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அதிபரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.


விளையாட்டு

1.கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு பின் அடுத்த நாள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டம் பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படுகிறது.
பாக்ஸிங் டே என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்து கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்னில் ஆண்டுதோறும் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் சிறப்பு வாய்ந்ததாகும்.


ன்றைய தினம்

  • சுனாமி பேரிடர் தினம்(2004)
  • ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)
  • ஆங் சான், பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார்(1944)
  • பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது(1933)
  • சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது(1991)
  • ஆங்கில கணிதவியலாளர் சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம்(1791)

– தென்னகம்.காம் செய்தி குழு