தமிழகம்

1.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளரை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று இந்த வெற்றியை ஈட்டினார்.இந்த வெற்றியின் மூலம் தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளார் என்ற பெருமையை டிடிவி தினகரன் பெற்றுள்ளார்.


இந்தியா

1.நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூரு மாநகருக்கு தனியாக இலச்சினை (லோகோ) ஒன்றை, கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2.மும்பையில் இந்தியாவிலேயே மிக உயரமான 65 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.மும்பையைச் சேர்ந்த கிரேஸ் தால்கானா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை வளர்த்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சார்லஸ் பாபேஜ் பிறந்த தினம் (Charles Babbage Birth Day).
சார்லஸ் பாபேஜ் என்பவர் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று லண்டனில் பிறந்தார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை உருவாக்கினார். இதனால் இவரை கணினியின் தந்தை என்றும் அழைக்கின்றனர். இவரால் உருவாக்கப்பட்ட கணினி மிகப்பெரிய அறைக்குள் ஏராளமான இயந்திரங்களைக் கொண்டது.
2.இன்று 13வது சுனாமி நினைவு தினம்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு