தமிழகம்

1.கடந்த 7 ஆண்டுகளில், பண்டிகை, விழாக்காலங்களின் போது இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக ரூ. 1,254.39 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


இந்தியா

1.உத்தரப் பிரதேசம், கேரளம், சத்தீஸ்கர், திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

2.ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து ஆய்வுசெய்வதற்காக  அந்த மாநிலத்துக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


வர்த்தகம்

1.நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு கால அளவுகளைக் கொண்ட குறித்தகால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் வரை குறைத்துள்ளது.


உலகம்

1.பயங்கரவாதத்தை பிற நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவும், பஹ்ரைனும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

2.ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.


விளையாட்டு

1.உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் சிந்து. ஒகுஹராவை 21-7, 21-7 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.பிரகாஷ் பதுகோன் கடந்த 1983-இல் வெள்ளியும், சாய்னா நெவால் 2015-இல் வெண்கலம், 2017-இல் வெள்ளியும், வென்றிருந்தனர்.
தற்போது 2019-இல் சிந்து தங்கம், பிரணீத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். இரட்டையர் பிரிவில் அஸ்வினி-ஜுவாலா கட்டா 2011-இல் வெண்கலம் வென்றிருந்தனர்.

2.ஜப்பான் ஒகினாவாவில் நடைபெற்ற 2019 சூப்பர் ஒகினாவா கராத்தே போட்டியில் சென்னையைச் சேர்ந்த மஹிதா சுரேஷ், கட்டா மற்றும் குமிதே ஆகிய 2 பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • அமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்
  • புனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910)
  • தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)
  • அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)

– தென்னகம்.காம் செய்தி குழு