தமிழகம்

1.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2.தமிழக அரசு கட்டடங்களில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்த நிறுவனம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாநில எரிசக்தி முகமை திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்தியா

1.இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடி செலவில் 135 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம்  ஒப்புதல் வழங்கியது.

2.மேகாலயத்தின் 18-ஆவது ஆளுநராக ததாகதா ராய்  பதவியேற்றுக் கொண்டார்.

3.இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராக சிறந்த அறிவியலாளரும், பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல்சார் ஆலோசகருமான ஜி.சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40,084 கோடி டாலராக (சுமார் ரூ.27.65 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.
2.நடப்பு காரீப் பருவத்தில் இதுவரையில் நெல் பயிரிடும் பரப்பு 356.83 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.


உலகம்

1.யேமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை நடத்திய வான்வழித் தாக்குதலில் 26 சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.


விளையாட்டு

1.ஆசியப் போட்டி தடகளத்தில் ஆடவர் குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங்.
ஆசியப் போட்டியின் 7-ஆவது நாளான சனிக்கிழமை ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, வீரர் செளரவ் கோஷல் ஆகியோர் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டன் நாக் அவுட் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-6, 21-14 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் பிட்டிரியானியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில்  பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற கேம் கணக்கில் கிரகோரியா மாரிஸ்காவை 35 நிமிடங்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.


ன்றைய தினம்

  • அமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்
  • புனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910)
  • தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)
  • அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)
  • தென்னகம்.காம் செய்தி குழு