தமிழகம்

1. தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நீர்நிலைகளை தூர்வாருவதற்கு தேவையான இயந்திரங்களை வாங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


இந்தியா

1.சந்திரயான் 2 திட்டத்தை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்கு சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா செலுத்தியது. இதைத் தொடர்ந்து, நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கு சந்திரயான் -2 விண்கலத்தை இம்மாதம் செலுத்த இந்தியா முடிவு செய்திருந்தது.

2.இந்திய முன்னாள் ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் ஷெசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.சரக்கு போக்­கு­வ­ரத்­தில்,வரி ஏய்ப்பு உள்­ளிட்ட முறை­கே­டு­கள் நடை­பெ­று­வதை தடுக்க, ‘இ – வே பில்’ திட்­டத்­தில் சில மாற்­றங்­களை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் செய்­துள்­ளது.

2.வரும் 2020 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டீசல் கார் விற்பனையை நிறுத்தப் போவதாக நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


உலகம்

1.ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் வியாழக்கிழமை முதல் முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2.செவ்வாய் கிரகத்தில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டதை, அங்கு ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்க ஆய்வுக் கலமான “இன்சைட்’ முதல் முறையாகக் கண்டறிந்துள்ளது.


விளையாட்டு

1.பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் வியாழக்கிழமை ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மொட்கில்-திவ்யான்ஸ் சிங் பன்வார் இணை 17-15 என்ற புள்ளிக்கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
அதே போல் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை 16-6 என்ற புள்ளிக் கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

2.ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

3.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சரிதா தேவி, மணிஷா மெளன், சோனியா சஹல், ஆடவர் பிரிவில் ஷிவ தாபா, ஆஷிஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.


ன்றைய தினம்

  • அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்
  • தான்சானியா தேசிய தினம்
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி பிறந்த தினம்(1762)
  • கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இறந்த தினம்(1920)
  • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை இறந்த தினம்(1897)

– தென்னகம்.காம் செய்தி குழு