தமிழகம்

1. இரு மாநில நதிநீர் பிரச்னைகள் குறித்து கேரள, தமிழக முதல்வர்கள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பம்பா-அச்சன்கோயில் நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

2.கடந்த 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கான கால அளவை மதிப்பிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2.இந்தியாவில் திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு, பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் (76) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.தமிழகத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியத்தை, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது என, தொழில் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

2.பிரிட்டனைச் சேர்ந்த, ‘தாமஸ் குக்’ நிறுவனம்,  திவாலாகி, சரிந்து போனது. 178 ஆண்டுகள் பழமையான, பயண ஆலோசனை மற்றும் ஏற்பாடுகள் நிறுவனமான, தாமஸ் குக் திவாலானது, உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


உலகம்

1.இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் விரைவில் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும்’ என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

2.பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.6-ஆவது முறையாக லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பிஃபாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

2.பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆசிய வயதுப் பிரிவு நீச்சல் போட்டியில் ஆடவர் 4-100 மீ. ப்ரீஸ்டைல் ரிலே பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கத்துடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது.


ன்றைய தினம்

  • மொசாம்பிக், பாதுகாப்பு படையினர் தினம்
  • தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)
  • அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
  • பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்(1513)

– தென்னகம்.காம் செய்தி குழு