தமிழகம்

1.இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பத்மஜா சந்துரு பொறுப்பேற்றார்.
இதற்கு முன்பு மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை மேலாண் இயக்குநராக (உலகச் சந்தை) அவர் பணியாற்றி வந்தார்.

2.தமிழகத்தின் 18 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ. 108 கோடியில் அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன.


இந்தியா

1.வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், சூழலையும் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரம் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஒடிஸா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் உள்ளன.
அம்ருத் நகர்ப்புற புத்தாக்கத் திட்டத்தின் அடிப்படையில் அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

2.இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு சராசரியாக 19 நீதிபதிகள் மட்டுமே இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

3.கேரளத்தில் அனைவருக்கும் அக்டோபர் 2-ஆம் தேதி இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.மென்பொருள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் இலவச மென்பொருள் வழங்கும் திட்டத்தை கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது.


வர்த்தகம்

1.சென்ற ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை 17.17 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 96.9 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 17.17 சதவீதம் அதிகரித்து 1.13 கோடியாக உயர்ந்துள்ளது.


உலகம்

1.மாலத்தீவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், அந்த நாட்டை கடந்த 5 ஆண்டுகளாக  ஆட்சி செலுத்தி வந்த அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்துப் போட்டியிட்ட இப்ராஹிம் முகமது சோலீ வெற்றி பெற்றார்.


விளையாட்டு

1.லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் டீம் ஐரோப்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸி. டென்னிஸ் ஜாம்பவானும், 11 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ராட் லேவர் பெயரில் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.


ன்றைய தினம்

  • மொசாம்பிக், பாதுகாப்பு படையினர் தினம்
  • தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)
  • அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
  • பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்(1513)
  • தென்னகம்.காம் செய்தி குழு