தமிழகம்

1.பதினெட்டு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்றுதீர்ப்பு வழங்க உள்ளது.

2.லோக் ஆயுக்த அமைப்பை 3 மாதங்களில் அமைத்து பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் காட்சி அரங்குகள் அமைக்க முன்பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

4.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் அவர்களது பொறுப்புகளில் இருந்து மத்திய அரசு விடுவித்துள்ளது. அவர்கள் இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அலோக் வர்மாவுக்குப் பதிலாக, சிபிஐ இடைக்கால இயக்குநராக தேர்வு செய்யப்பட்ட நாகேஸ்வர ராவ், உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2.வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்-4) வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

3.நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4.நாட்டிலேயே முதன்முறையாக, மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் 18 என்னும் அதிவிரைவு ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்காக ரயில்வே வாரியத்திடம் வரும் 29-ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது.


வர்த்தகம்

1.சென்னை : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, கே.என்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.சீனாவின் லான்சூ நகரையும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தையும் இணைக்கும் வகையில் புதிய ரயில்-சாலை வழி சரக்கு போக்குவரத்து சேவையை சீனா தொடங்கியுள்ளது.

2.இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.

3.இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகளை பெறுவதற்காக கூடுதலாக 777 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5ஆயிரம் கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
தரையிலிருந்து புறப்பட்டு வானில் எதிரி ஏவுகணையைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பராக் 8 ரக தொலைதூர ஏவுகணைகளை இந்தியாவுக்கு இஸ்ரேல் அளிப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற நடப்பு சாம்பியன் இந்தியா-மலேசிய அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

2.புதிய உலக கிளப் கால்பந்து சாம்பியன் போட்டியை நடத்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) திட்டமிட்டுள்ளது.


ன்றைய தினம்

  • தகவல் அறியும் உரிமை சட்ட தினம்
  • கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
  • விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது(2001)
  • இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
  • ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)
  • தென்னகம்.காம் செய்தி குழு