தமிழகம்

1.பார்வர்டு பிளாக் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எல். சந்தானம் ( 85 ) உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் காலமானார்.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆம் கட்ட தேர்தலில், காஷ்மீரில் 55 சதவீத வாக்குகளும், ஜம்முவில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

2. சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும், திரைப்பட நடிகருமான அம்பரீஷ் (66) பெங்களூரு மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார்.

3.நாட்டில் மேற்கொள்ளப்படும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளைக் கண்காணிக்கும் அமைப்பான, “தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு'(நோட்டோ) சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள், இந்த ஆண்டு வழங்கப்பட மாட்டாது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4.இத்தாலி நாட்டின் வெனீஸ் நகரில், சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்தியா சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, பஞ்சாப் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜு ஆகியோர் செல்கின்றனர்.


வர்த்தகம்

1.வங்கிகள் வழங்கிய கடன் நவம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இரண்டு வார காலத்தில் 14.88 சதவீதம் அதிகரித்துள்ளது.

2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 57 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

3.மத்­திய அரசு, பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­ம­திக்கு, எம்.இ.ஐ.எஸ்., திட்­டத்­தின் கீழ், 5 சத­வீத வரிச் சலுகை வழங்­கப்­படும் என, அறி­வித்­துள்­ளது.பாசு­மதி அல்­லாத அரிசி ஏற்­று­மதி,
மூன்­றாண்­டு­களில் இல்­லாத வகை­யில், நடப்பு, 2018, 19ம் நிதி­யாண்­டில், முதன் முறை­யாக குறைந்­துள்­ளது.


உலகம்

1.தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் எல்லை விவகாரம் தொடர்பான 21-ஆவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.

2.தைவானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, ஆளுங்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிபர் சாய் இங்-வென் அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மேரி கோம் 6-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2.மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

3.200 டெஸ்ட் விக்கெட்டுகள், 3000 டெஸ்ட் ரன்கள்.இந்த இரண்டையும் குறைவான டெஸ்டுகளில் எடுத்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன்.


ன்றைய தினம்

  • சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
  • இந்தோனேஷிய ஆசிரியர் தினம்
  • ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கான காப்புரிமம் பெற்றார்(1867)
  • சுரிநாம் விடுதலை தினம்(1975)
  • பொஸ்னியா ஹெர்செகோவினா தேசிய தினம்(1943)
  • தென்னகம்.காம் செய்தி குழு