Current Affairs – 25 November 2017
தமிழகம்
1.சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2.தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.இந்திய கடற்படையில் முதல் முறையாக பெண் பைலட்டாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த அஸ்தா சேகல், பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவைச் சேர்ந்த எஸ்.சக்திமாயா ஆகிய 3 கடற்படையின் ஆயுதங்கள் பிரிவு (என்ஏஐ) அதிகாரிகளாக பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
2.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிசம்பர் 15 முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
உலகம்
1.சீனாவிடம் இருந்து விடுதலை வேண்டுமென்று திபெத் கேட்கவில்லை. திபெத் பகுதிக்கு வளர்ச்சி வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.
வர்த்தகம்
1.எஸ்பிஐ `யூ ஒன்லி நீட் ஒன் (YONO)’ என்ற பெயரில் தனது புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த செயலி மூலம் வங்கி பரிவர்த்தனையையும் பொருட்களையும் வாங்கிக் கொள்ளமுடியும்.
2. கோ ஏர் விமான நிறுவனம் ரூ.312-க்கு சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட 7 நகரங்களுக்கு ஒரு வழி விமானப் பயணத்தை அறிவித்துள்ளது.
விளையாட்டு
1.பாகிஸ்தான், ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தான் தேசிய டி20 கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் ஒயிட்ஸ் அணிக்கு ஆடும் கம்ரன் அக்மல், சல்மான் பட் ஜோடி 209 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து புதிய டி20 தொடக்கக் கூட்டணி சாதனை படைத்துள்ளனர்.
இன்றைய தினம்
1.இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்
2.1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
3.1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
–தென்னகம்.காம் செய்தி குழு