தமிழகம்

1.பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர்.

2.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நோட்டா வாய்ப்பைப் பயன்படுத்திய வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நோட்டா வாய்ப்பை 1.44 சதவீத வாக்காளர்கள் (5.82 லட்சம் பேர்) பயன்படுத்தினர்.

3.மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.


இந்தியா

1.மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை அடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.

2.உச்சநீதிமன்றத்துக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 4 நீதிபதிகளும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர். இதன் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவான 31-ஐ எட்டியுள்ளது.


வர்த்தகம்

1.பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதன் எதிரொலியால் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.

2.வர்த்தக வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளது.


உலகம்

1.ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி20 நாடுகள் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

2.ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி20 நாடுகள் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

3.முகநூல் (ஃபேஸ்புக்) பயனாளர் தொடர்பான விவரங்களை கோருவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கய் ரோஸன் தெரிவித்துள்ளார்.

4.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

5.மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.


விளையாட்டு

1.இந்தியா ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச்சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை மேரி கோம், சரிதா தேவி உள்ளிட்டோரும், ஆடவர் பிரிவில் அமித் பாங்கல், சிவா தாபா, ஆஷிஸ் உள்ளிட்டோரும் தங்கம் வென்றனர்.

2.கரூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஆர்மி, இந்தியன் ஏர்போர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை தகுதி பெற்றன.


ன்றைய தினம்

  • உலக தைராய்டு தினம்
  • அர்ஜெண்டினா தேசிய தினம்
  • லிபனான் விடுதலை தினம்(2000)
  • அமெரிக்கா தனது முதல் அணுஆற்றலினால் இயங்கும் பீரங்கியைச் சோதித்தது(1953)
  • ஆப்ரிக்க ஒன்றியம் உருவானது(1963)

– தென்னகம்.காம் செய்தி குழு