தமிழகம்

1.கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக, இயற்கை எழில் சூழ்ந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60ஆவது பழக் கண்காட்சி வரும் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுவதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
2.வேலூர் கோட்டையில் குப்பை, சாணம் கொட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும், 3 குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
3.உதகை கோடை விழாவின் ஒரு பகுதியாக 8 நாள் ஓவியக் கண்காட்சி நேற்று தொடங்கியது.


இந்தியா

1.பேருந்து நிறுத்தங்களில் இருந்தவாறே பேருந்துகளின் வருகை குறித்த நேரத்தை பயணிகள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வகையில் மாற்றம் செய்யப்பட்ட செயலியை தில்லி அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.
2.கேரள முதல்வர் பினராயி விஜயனின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.சிட்டி யூனியன் வங்கி 2017-2018-ஆம் நிதியாண்டில் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.152.12 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.


உலகம்

1.வட கொரியாவின் பங்கை-ரீ கிராமத்திலுள்ள அணு ஆயுத சோதனை மையத்தை சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் அந்த நாடு வியாழக்கிழமை அழித்தது.


விளையாட்டு

1.பார்சிலோனோ அணியின் பிரபல கால்பந்து வீரர் ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஜப்பானைச் சேர்ந்த விப்ஸல் கோபே கிளப்பில் இணைந்துள்ளார்.
2.கோவையில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 53-ஆவது ஆடவர் கூடைப்பந்து, சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 17-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை (மே 26) தொடங்குகின்றன.
3.ஜப்பான் ஜிபு நகரில் நடக்கவுள்ள 18-வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வீராங்கனைகளுடன் 51 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.வரும் ஜூன் 7 முதல் 10-ஆம் தேதி வரை தடகள சாம்பியன் போட்டிகள் நடக்கின்றன.


ன்றைய தினம்

  • கிமு 240 – ஹேலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 1-வது தடவையாக அவதானிக்கப்பட்டது.
  • 1914-அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.