Current Affairs – 25 March 2019
தமிழகம்
1.தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களை ஒட்டி, தமிழக அரசு மற்றும் பேரவைச் செயலக இணையதளங்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் உருவப் படங்களும் அகற்றப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
இந்தியா
1.மக்களவைத் தேர்தலுக்காக ரூ.33 கோடி மதிப்பில் 26 லட்சம் மை பாட்டில்ஹகளை தயாரிக்குமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மே 19 ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது.
2014 தேர்தலில் 21.5 லட்சம் மை பாட்டில்களை தேர்தல் ஆணையம் வாங்கியது. இந்த முறை 4.5 லட்சம் மை பாட்டில்களை அதிகமாக வாங்குகிறது.
வர்த்தகம்
1.இந்தாண்டு ஜனவரியில், அமைப்பு சார்ந்த துறையில், 17 மாதங்களில் இல்லாத வகையில், 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் தெரிவித்துள்ளது
2.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வரும், 2019- – 20ம் நிதியாண்டில், ஆறு முறை கூடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வசம் இருந்த கடைசி நகரமான பாகுஸை(Baghuz) அந்த நாட்டு குர்துப் படையினர் மீட்டனர். இதையடுத்து, ஐ.எஸ். சாம்ராஜ்யம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அர்ச்சனா வெள்ளிப் பதக்கத்தையும், வீரர் சத்யன் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
மஸ்கட்டில் ஐடிடிஎப் சேலஞ்ச் பிளஸ் ஓபன் போட்டிகள் நடைபெற்றன.
2.சுல்தான் அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்திய-கொரிய அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இன்றைய தினம்
- கிரேக்க விடுதலை நாள்
- பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1918)
- சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனான டைட்டானை கிறிஸ்டியான் ஹைஃன்ஸ் கண்டுபிடித்தார்(1655)
- முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954)
– தென்னகம்.காம் செய்தி குழு