விளையாட்டு

1.மேற்கு வங்காள மாநிலத்தில் ஜேசி முகர்ஜி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலிகட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் – மோகுன் பகன் அணிகள் மோதின.இதில் இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.


ன்றைய தினம்

1.இன்று சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம்(International Day of Remebrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade).
கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவு கூறவும் மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு