தமிழகம்

1.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜூலை 30 வரை நடைபெறும் என பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

2.தமிழகம் முழுவதும் குடிநீர் விநியோகத்தில் தினமும் 346 மில்லியன் லிட்டர் குறைந்துள்ளது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் கூறினார்.


இந்தியா

1.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177 புள்ளி 25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.வெளிநாடுகளில் கடந்த 1980 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் 216 பில்லியன் டாலர் (ரூ.14 லட்சம் கோடி) முதல் 490 பில்லியன் டாலர் (ரூ.34 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3.வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்லிடப் பேசி சிம் கார்டு இணைப்பு வாங்கவும் விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை அடையாள ஆவணமாக பயன்படுத்த வகை செய்யும் மசோதா, மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது.


வர்த்தகம்

1.ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான, விரால் ஆச்சார்யா, பதவிக்காலம் முடிவடைவதற்கு, இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2.பயணிகள் வாகன விற்பனைச் சந்தையில் 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்ட போதிலும், கடந்த மே மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 வாகனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் 8 ரக கார்கள் இடம்பெற்றுள்ளன.


உலகம்

1.ஆளில்லா கனரக போக்குவரத்து சரக்கு விமானத்தை சீன ராணுவம் வெற்றிகரமாக  சோதனை செய்துள்ளது.

2.ஜப்பானின் ஒசாகா நகரில் வரும் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.


விளையாட்டு

1.பர்மிங்ஹாம் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றதின் மூலம் முதன்முறையாக உலகின் நம்பர் ஒன் வீராங்கனை அந்தஸ்தை கைப்பற்றியுள்ளார் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி.

2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் 16 சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.


ன்றைய தினம்

  • இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது (1975)
  • விண்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
  • குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
  • உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
  • பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)

– தென்னகம்.காம் செய்தி குழு