தமிழகம்

1.18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் புதிய தலைமைச் செயலராக பிவிஆர் சுப்பிரமணியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2.முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், ஏற்கெனவே முனைவர் பட்டம் (பி.ஹெச்டி.) பெற்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து முறைகேடு செய்வதைத் தடுப்பதற்காக, “டர்னிடின்’ (TURNITIN) என்ற கணினி மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1. பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிர்வாக இயக்குநராக அர்ஜித் பாசு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.


உலகம்

1.துருக்கியில் பொதுத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விளையாட்டு

1. ஸ்வீடனுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி  இறுதி கட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

2.சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 2-1 என வீழ்த்தி  வெற்றி பெற்றது இந்தியா.


ன்றைய தினம்

  • இந்தியாவில் முதல் முறையாக அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது (1975)
  • வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
  • குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
  • உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
  • பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)

–தென்னகம்.காம் செய்தி குழு