Current Affairs – 25 July 2019
தமிழகம்
1.தனியார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் மின்கல கார்கள் இயக்கத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது நான்காவது விரிவாக்கத் திட்டத்தை ரூ.7 ஆயிரம் கோடி முதலீட்டில் செயல்படுத்த முடிவு செய்தது. இதன் மூலம், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், மின்சாரத்தில் இயங்கும் வகையிலான ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
2.பொருளாதார ரீதியிலான ஏழாவது கணக்கெடுப்பை மேற்கொள்ள மாவட்ட- மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
இந்தியா
1.பயங்கரவாத தடுப்பு தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
2.மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு பணி அதிகாரியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மத்திய மின்துறை செயலருமான அஜய் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மத்திய அரசின் அடுத்த உள்துறை செயலராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3.விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை உயர்த்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தொடங்கினர். அன்றைய தினம் பிற்பகல் 2.52 மணியளவில் முதல்நிலை உயர்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
4.உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
5.மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட லால்ஜி தாண்டன், வரும் 29-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
6.ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் விஸ்வபூஷண் ஹரிசந்தன் (85) பதவியேற்றார்.
வர்த்தகம்
1.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் நிகர லாபம், 22 சதவீதமாக அதிகரித்து, 1,472 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிகர லாபம், 1,215 கோடி ரூபாயாக இருந்தது.
2.பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜூன் காலாண்டில் ரூ.342 கோடி நிகர இழப்பை கண்டுள்ளது.
உலகம்
1.பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். அவர் முன்பு வெளியுறவுத்துறை அமைச்சராகவும், லண்டன் நகர மேயராகவும் இருந்துள்ளார்.
விளையாட்டு
1.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் வெளியிடப்பட்டன.
2.ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இன்றைய தினம்
- துனீசியா குடியரசு தினம்(1957)
- அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது(1908)
- இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)
- சோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவப்பட்டது(1925)
- முதல் சீன-ஜப்பானியப் போர் துவங்கியது(1894)
– தென்னகம்.காம் செய்தி குழு