Current Affairs – 25 July 2018
தமிழகம்
1.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுடன் புதிய நியமனத்துக்கான போட்டித்தேர்வு என இனி இரண்டு தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறை இனி கிடையாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டித் தேர்வை எழுத முடியும். இந்த இரு தேர்வுகளையும் தனித் தனியாக நடத்தலாம் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
2.பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி முதல் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இந்தியா
1.லோக்பால் பரிசீலனை குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
லோக்பால் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தவில்லை
வர்த்தகம்
1. இந்தாண்டு, அன்னிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்த்த நாடுகளில், இந்தியா, 3 இடங்கள் கீழிறங்கி, 11வது இடத்தை பிடித்துள்ளது.
உலகம்
1.ருவாண்டா நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியா சார்பில் சுமார் ரூ.1,377 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், ருவாண்டாவில் விரைவில் இந்தியத் தூதரகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
2.தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணியில் ஈடுபட்ட 9 ஆஸ்திரேலியர்களுக்கு அந்த நாட்டு அரசு வீரப் பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது.
விளையாட்டு
1.மகளிர் ஒற்றையர் டபிள்யு டிஏ தரவரிசைப் பட்டியலில் உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தை ருமேனியாவின் சிமோனா ஹலேப் (7571) தக்க வைத்துள்ளார்.
டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி (6740), இரண்டாம் இடத்திலும், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (5463) மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றனர்.
2.அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைக்கான விருதுகளை சுனில் சேத்ரி, கமலா தேவி ஆகியோர் பெற்றனர்.
பிரபல வீரர் பாய்ச்சுங் பூட்டியாவுக்கு பின்னர் இந்திய அணிக்காக 100 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சிறப்பை சுனில் சேத்ரி பெற்றுள்ளார்.
இன்றைய தினம்
- துனீசியா குடியரசு தினம்(1957)
- அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது(1908)
- இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)
- சோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவப்பட்டது(1925)
- முதல் சீன-ஜப்பானியப் போர் துவங்கியது(1894)
–தென்னகம்.காம் செய்தி குழு