தமிழகம்

1.தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இது, கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளைக் காட்டிலும் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாகும்.


இந்தியா

1.“ரயில் 18′ விரைவு ரயிலை இயக்குவதற்கு அரசின் பொறியியல் துறை ஆய்வாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த ரயில் ஒரு வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

2.முன்னாள் மத்திய அமைச்சரும், கோவா முன்னாள் ஆளுநருமான பானு பிரகாஷ் சிங்(90) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.

3.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்’, ‘கலாம் சாட்’ ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது.


வர்த்தகம்

1.நாட்டின் கோதுமை உற்பத்தி நடப்பு ரபி பருவத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 10 கோடி டன்னைத் தாண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.ஜி.எஸ்.டி., செலுத்துவோருக்காக, புதிதாக தமிழ் வலைதளம் துவக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.வெனிசூலாவின் இடைக்கால அதிபராக, தம்மை அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவாய்டோ அறிவித்துக் கொண்டதை அமெரிக்காவும், பிற முக்கிய தென் அமெரிக்க நாடுகளும் அங்கீகரித்துள்ளன.

2.தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) சீனா சோதனை பரிசோதித்துப் பார்த்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

2.ஆஸி. ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒஸாகாவும்-செக் குடியரசின் குவிட்டோவாவும் மோதுகின்றனர்.


ன்றைய தினம்

  • இந்திய தேசிய வாக்காளர் தினம்
  • ரஷ்யா மாணவர் தினம்
  • நாடுகளின் அணி உருவாக்கப்பட்டது(1919)
  • மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1755)
  • இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1971)

– தென்னகம்.காம் செய்தி குழு