இந்தியா

1.அசாமில் பெண்கள், குழந்தைகள் மட்டும் பயணம் செய்யும் வகையில் பெண் டிரைவர்கள் கொண்ட பிங்க் நிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2.1950-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளான இன்று (ஜன. 25) தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.தேசிய வாக்காளர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி கூறியதாவது, “வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கும் பணியில் 18 வயதானவர்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். வாக்குகளின் அதிகாரம் மகத்தானது என்பதை உணரவைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
3.நாளை நடக்க உள்ள குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக மியான்மர் ஆலோசகர் ஆங் சான் சூகி இன்று தலைநகர் டெல்லி வந்தடைந்தார்.


உலகம்

1.சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் 1500 தொழிலாளர்களை கொண்டு ஒரே இரவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1755 – மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
2.1971 – இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு