தமிழகம்

1.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்தியா

1.விவசாயிகளுக்கு ரூ.75,000 கோடியில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படவுள்ளது.

2.தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ், வாக்குப்பதிவு இயந்திரமும் ஒரு தகவல்தான், தேர்தல் ஆணையத்திடமிருந்து அதனை கோரி விண்ணப்பிக்க இயலும்’ என்று மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேலும் ஊக்குவிப்பதற்காக எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் புரமோஷன் செல் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 


உலகம்

1.வியத்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ள அமெரிக்காவுடனான 2ஆவது மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ரயிலில் புறப்பட்டார்.

2.இலங்கையில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 155 வீடுகள், அவற்றின் பயனாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.


விளையாட்டு

1.உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் புதிய சாதனையுடன் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார் 16 வயதே ஆன இந்திய வீரர் செளரவ் செளதரி. இதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.


ன்றைய தினம்

  • குவைத் தேசிய தினம்
  • மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
  • சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்(1836)
  • தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)

– தென்னகம்.காம் செய்தி குழு