தமிழகம்

1.நகர் ஊரமைப்புத் துறை ஆணையாளர் பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திங்கள்கிழமை பிறப்பித்தார்.

2.திருநெல்வேலி அரசு மருத்துவமனை அருகே மத்திய அரசு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர்தர சிறப்பு மருத்துவமனை (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) ஜனவரி இரண்டாம் வாரத்தில் திறக்கப்பட உள்ளது என்றார் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.


இந்தியா

1.ஆதார் அட்டை திட்டம் அரமைப்புச் சட்டப்படி செல்லும் என்று அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2.கணினிகளை கண்காணிப்பது தொடர்பான அதிகாரங்களை சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு வழங்கி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

3.ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், தனது அமைச்சரவையை திங்கள்கிழமை விரிவாக்கம் செய்தார். அதன்படி, 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


வர்த்தகம்

1.கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கார்கள் விற்பனையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ரகக் கார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2.மத்திய அரசு, விரைவில் தோல், ஜவுளி, கடல் சார் பொருட்கள் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதிக்கு, ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவிக்க உள்ளது.


உலகம்

1.பனாமா ஆவண முறைகேடு தொடர்பான வழக்கொன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

2.சிரியாவிலிருந்து அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ரஞ்சி போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ள தமிழக வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் அபினவ் முகுந்த்.


ன்றைய தினம்

  • ஆன்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார்(1741)
  • சீன குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது(1947)
  • பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னா பிறந்த தினம்(1876)
  • இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம்(1924)
  • ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இறந்த தினம்(1977)

– தென்னகம்.காம் செய்தி குழு