இந்தியா

1.இந்தியாவில் முதன் முறையாக ஏ.சி வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் புறநகர் ரெயில் சேவை மும்பையில் இன்று தொடங்கப்பட்டது.


உலகம்

1.நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனாவில் முதல் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த விமானம் 37 மீட்டர் நீளம் கொண்டது. அதன் சிறகுகள் 38.8 மீட்டர் நீளமானவை. இதில் மொத்தம் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.65 சிக்ஸர்களுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.ரோகித் சர்மாவை தொடர்ந்து டி வில்லியர்ஸ் 63 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


இன்றைய தினம்

1.1947 – சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
2.1990 – உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு