Current Affairs – 25 August 2018
தமிழகம்
1.தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2.அரசு அலுவலகங்களுக்குத் தேவையான மின்னணு பொருள்களை ஆன்லைன் மூலமாகக் கொள்முதல் செய்யும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா
1.ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2-வது முறையாக வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.
2.சுற்றுச்சூழல் காற்றுமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள் காலத்தில் சுமார் ஒன்றரை ஆண்டு குறைவதாக அமெரிக்க டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.ஐ.எம்.டி.எம்.ஏ., எனப்படும், இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின்,
தேசிய உற்பத்தித் திறன் உச்சி மாநாடு, சென்னையில் நடைபெற்றது. இது, 12வது மாநாடு ஆகும்.
உலகம்
1.ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியில் பல நாள்களாக நீடித்து வந்த அதிகாரப் போட்டியில் ஒரு திருப்பமாக, அந்த நாட்டின் நிதியமைச்சராக இருந்த ஸ்காட் மாரீசன் புதிய பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
விளையாட்டு
1.டென்னிஸ் ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டி விஜ் சரண் இணை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர்-டெனிஸ் எவஸ்வ் இணையை வீழ்த்தி தங்களின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினிடம் தோல்வியுற்று வெண்கலம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்றார்.
துப்பாக்கி சுடுதல் மகளிர் 10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹினா சித்து 219.2 புள்ளிகள் எடுத்து முதன்முறையாக வெண்கலம் வென்றார்.
பாலேம்பங்கில் நடைபெற்ற ரோயிங் (படகுப் போட்டி) இந்திய வீரர்கள் ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இன்றைய தினம்
- உருகுவே விடுதலை தினம்(1825)
- பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)
- கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
- ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)
- தென்னகம்.காம் செய்தி குழு