தமிழகம்

1. “டிக் டாக்’ நிறுவனம் அளித்த உறுதிமொழியை ஏற்று “டிக் டாக்’ செயலி மீதான தடை உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  உத்தரவிட்டது.

2.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன்.


இந்தியா

1.இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

2.கேரளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாகும்.


வர்த்தகம்

1.ரிசர்வ் வங்கி, வெளிச் சந்தையில், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அரசு கடன் பத்திரங்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

2.கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, 37.31 லட்சம் கோடி ரூபாய். இது, 2017 – 18ம் ஆண்டை விட, 7.97 சதவீதம் வளர்ச்சி என, மத்திய வணிகத் துறை தெரிவித்து உள்ளது.

3.தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்க, பல்வேறு அரசு அமைப்புகளிடம், மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில், ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.சீன வர்த்தக வழித்தட மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2.ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினைச் சந்திப்பதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் புதன்கிழமை ரஷ்யா வந்தடைந்தார்.


விளையாட்டு

1.கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.யு.சித்ரா 1500 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

2.சீனாவின் ஸியான் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தாங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

3.சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெக்வால் ஆகியோர் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.


ன்றைய தினம்

  • சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம்
  • போர்ச்சுகல் விடுதலை தினம்(1974)
  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி பிறந்த தினம்(1874)
  • அமெரிக்கா, ஸ்பெயின் மீது போரை அறிவித்தது(1898)

– தென்னகம்.காம் செய்தி குழு