உலகம்

1.உலகின் மிகப்பெரிய, 11.15 செ.மீ. நீள இறக்கையுள்ள பிரம்மாண்ட கொசுவை, சீன பூச்சியியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், Chengdu பகுதியில் உள்ள Qingcheng மலைப்பகுதியில், இந்த கொசு கண்டுபிடிக்கப்படடதாக தெரிவித்துள்ள சீன வல்லுனர்கள், இது Holorusia mikado என்ற இனத்தை சார்ந்தது என்றனர். இவ்வகை கொசுக்கள் பார்க்க பெரிதாக தெரிந்தாலும், ரத்தம் குடிப்பதில்லை எனவும் தேனை மட்டுமே உட்கொள்ளும் எனவும் சீன பூச்சியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
2.பல லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகளுக்கு அடைக்கலம் அளித்த வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு சிட்னி நகரில் வரும் 27-ம் தேதி நடைபெறும் சர்வதேச மகளிர் உச்சி மாநாட்டின்போது அவருக்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்படுகிறது.
3.வங்காளதேசத்தின் அதிபராக இருந்த அப்துல் ஹமீத் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று பதவியேற்றார்.
4.சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் முதன் முறையாக ஊழியர் இன்றி செயல்படும் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.


ன்றைய தினம்

1.இன்று உலக மலேரியா தினம்(World Malaria Day).
ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 219 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கின்றனர். ஆகவே இதனை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல், மலேரியா தினமாக ஏப்ரல் 25ஐ அறிவித்துக் கொண்டாடி வருகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு