Current Affairs – 24 September 2019
தமிழகம்
1. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2.புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கிளியூரில் அமைந்துள்ள சிவன் கோயில் வளாகத்தில் உத்தம சோழரின் பன்னிரெண்டாவது ஆட்சிக்காலமான கி.பி 982-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா
1.உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 4 நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றனர். அதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
வர்த்தகம்
1.கடந்த 2018-19 பயிர் ஆண்டின் (ஜூலை-ஜூன்), காரீப் பருவத்தில் உணவுதானிய உற்பத்தி 14.17 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில், நடப்பு 2019-20 பயிர் ஆண்டுக்கான காரீப் பருவத்தில் நெல் மற்றும் பருப்பு வகைககள் விளைச்சல் கடந்தாண்டைக் காட்டிலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, உணவுதானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2.நடப்பு நிதியாண்டில் 450 புதிய கிளைகளை அமைக்கவும், 3500 பேருக்கு பணிவாய்ப்புகளை வழங்கவும் உள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
உலகம்
1.பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் குக் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் திடீரென்று திவாலானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற 6 லட்சம் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றனர்.
விளையாட்டு
1.உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் ஆகியோருக்கு ரொக்கப் பரிசை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வழங்கினார்.
2.உலக அணிக்கு எதிரான ராட் லேவர் கோப்பை போட்டி இறுதிச் சுற்றில் ஐரோப்பிய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.டென்னிஸ் ஜாம்பவான் ராட் லேவர் பெயரில் லேவர் கோப்பை போட்டி டீம் வேர்ல்ட்-டீம் ஐரோப்பா அணிகள் இடையே நடத்தப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த பிரபல வீரர்கள் ஒரு அணியாகவும், உலகின் இதர பிரபல வீரர்கள் ஒரு அணியாகவும் இணைந்து இப்போட்டியில் மோதுகின்றனர்.
இன்றைய தினம்
- உலக காதுகேளாதோர் தினம்
- கம்போடியா அரசியலமைப்பு தினம்
- முகமது நபி, மெக்காவில் இருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்(622)
- அமெரிக்க சுப்ரீம்கோர்ட் நிறுவப்பட்டது(1789)
- இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)
- ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது(1948)
- உலகின் முதல் இமெயில் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது(1979)
– தென்னகம்.காம் செய்தி குழு