தமிழகம்

1.தமிழகத்தில் நான்குவழிச் சாலைகளில் 500 இடங்களில் “ஹைடெக் ஆவின் பார்லர்’ அமைக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


இந்தியா

1.சர்வதேச அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 16-ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநரும், திரைக்கதையாசிரியருமான கல்பனா லஜ்மி உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 64.

3.இந்திய வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு அதிகாரியை வாட்ஸ் அப் சமூகவலைதள நிறுவனம் நியமித்துள்ளது.

4.பிரதமர் மோடி சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை  திறந்து வைக்கிறார்.

5.ஒடிஸா மாநிலத்தில் அதிநவீன இடைமறி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக  சோதனை நடத்தியுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளன. இதையடுத்து, சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.


உலகம்

1.சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமனம் செய்வது தொடர்பாக சீனா மற்றும் வாடிகன் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2.ராட்டை பயன்பாடு குறித்து மகாத்மா காந்தி எழுதிய கடிதம் அமெரிக்காவில் 6,358 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டது.


விளையாட்டு

1.ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

2.பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.


ன்றைய தினம்

  • உலக காதுகேளாதோர் தினம்
  • கம்போடியா அரசியலமைப்பு தினம்
  • அமெரிக்க சுப்ரீம்கோர்ட் நிறுவப்பட்டது(1789)
  • ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது(1948)
  • உலகின் முதல் இமெயில் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது(1979)
  • தென்னகம்.காம் செய்தி குழு