தமிழகம்

1.தமிழக பொதுத் துறை நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

2.பத்திரப் பதிவு ஆவண நிலையை அறிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியா

1.நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தீபாவளி அன்றும், இதர விழாக்காலங்களிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

2.முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டம், நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

3.தூக்குத் தண்டனை தொடர்பான வழக்குகளுக்கே முன்னுரிமைகள் கொடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.ஸ்மார்ட்போன்கள் விற்பனை மூன்றாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 4.4 கோடியை எட்டியுள்ளது.


உலகம்

1.சீனாவின் வூஜென் நகரில் வரும் நவம்பர் 7ம் தேதி சர்வதேச இணைய மாநாடு நடைபெற உள்ளது. சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் ஜீஜியாங் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

2.வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.இந்தியாவில் வரும் 2023-இல் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்கு புதிய முறையில் அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள தகுதிச் சுற்றில் 32 அணிகள் பங்கேற்கும். வரும் ஜூலை 2019 முதல் தொடங்கி 2022 மே மாதம் வரை நடைபெறும் தகுதிச் சுற்றில் 372 ஆட்டங்கள் இடம் பெறும்.
இதில் இருந்து 8 அணிகள் சிடபிள்யுசி சூப்பர் லீகில் இருந்தும், 13 அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
மீதமுள்ள கீழ்நிலை அணிகள் சிடபிள்யுசி தகுதி ஆட்டங்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இப்புதிய முறையின்படி 7 இணை உறுப்பினர்கள் அதிக ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட முடியும்.

2.ஐ.சி.எஃப். விளையாட்டு அரங்க வளாகத்தில் குளிர்வசதியுடைய பன்னோக்கு உள் விளையாட்டரங்கம்  திறக்கப்பட்டது.


ன்றைய தினம்

  • ஐக்கிய நாடுகள் தினம்(1945)
  • ஜாம்பியா விடுதலை தினம்(1964)
  • ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது(1917)
  • ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது(1931)
  • பிரேசிலில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1930)
  • தென்னகம்.காம் செய்தி குழு