தமிழகம்

1.கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர், தங்களது ஆய்வுப் பணிகளை சனிக்கிழமை தொடங்கவுள்ளனர்.


இந்தியா

1.ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 4 தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அதிக அளவில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2. இந்தியாவில் அதிக தொலைக்காட்சி விளம்பரங்களை ஒளிபரப்பிய நிறுவனங்களின் வரிசையில் நெட்ஃபிளிக்ஸ், ட்ரிவாகோ நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி பாஜக முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவில் இணையதள பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி பிராட்பேண்ட் (அகண்ட அலைவரிசை சேவை) வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46.36 கோடியை எட்டியுள்ளது.

2.தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், ‘வாழ்நாள் இலவச அழைப்பு’ சேவையை  நிறுத்தி உள்ளன.

3.கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலத்தில், பயணியர் கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை குறைந்துள்ளதாக, வாகன முகமை நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘படா’ தெரிவித்து உள்ளது.


உலகம்

1.இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு அளித்து வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள அவர், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

2.இலங்கை நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவில், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு உறுப்பினர்கள் பெரும்பான்மை பெற்றுள்ளனர்.


விளையாட்டு

1.ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியின் வால்ட் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை தீபா கர்மாகர் தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • துருக்கி ஆசிரியர் தினம்
  • காங்கோ தேசிய தினம்
  • ஏபல் டாஸ்மான், வான் டீமனின் நிலம்(தற்போதைய தாஸ்மானியா) என்ற தீவை கண்டுபித்தார்(1642)
  • சார்லஸ் டார்வின், ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் என்ற நூலை வெளியிட்டார்(1859)
  • புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம பொறுப்பு ஸ்ரீ அன்னையிடம் ஒப்படைக்கப்பட்டது(1926)
  • தென்னகம்.காம் செய்தி குழு